Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஜவுளி நிறுவனங்களின் பசுமை முதலீடுகளுக்கு நிதியுதவி! ஏற்றுமதியாளர்கள் சங்கம் முக்கிய முடிவு

ஜவுளி நிறுவனங்களின் பசுமை முதலீடுகளுக்கு நிதியுதவி! ஏற்றுமதியாளர்கள் சங்கம் முக்கிய முடிவு
திருப்பூர் ஜவுளித் தொழில் நிறுவனங்களில் பசுமை முதலீடுகள்

திருப்பூர் ஜவுளித் தொழில் நிறுவனங்களில் பசுமை முதலீடுகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்துதல், பொதுவான பசுமை உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றுக்கு உரிய நிதி பெறுவது தொடர்பாக, நபார்டு மற்றும் இன்டெல்கேப் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் (TEA) சார்பில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பகிரவும் WhatsApp Facebook

திருப்பூர்:

திருப்பூர் ஜவுளித் தொழில் நிறுவனங்களில் பசுமை முதலீடுகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்துதல், பொதுவான பசுமை உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றுக்கு உரிய நிதி பெறுவது தொடர்பாக, நபார்டு மற்றும் இன்டெல்கேப் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் (TEA) சார்பில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் எம். ஆனந்த், செயற்குழு உறுப்பினர்கள் மெய்செல்வன் மற்றும் என்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். 

கூட்டத்தில், ஜவுளித் தொழில் நிறுவனங்கள் பசுமை முதலீடுகளை மேற்கொள்வதற்கான உரிய நிதி ஆதரவைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்துதல், பொதுவான பசுமை உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான நிதி வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய டிஇஏ இணைச் செயலாளர் எம். ஆனந்த், “திருப்பூர் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையின் ஏற்றுமதி மதிப்பு ஆண்டுக்கு ரூ.46,000 கோடிக்கும் அதிகமாக உள்ளது. இத்துறையின் மூலம் சுமார் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது” என்று தெரிவித்தார்.

மேலும், திருப்பூர் ஜவுளித் தொழில் குழுமத்தில் மேற்கொள்ளப்படும் நிலைத்தன்மை சார்ந்த நடவடிக்கைகளையும் அவர் எடுத்துரைத்தார். குறிப்பாக, சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை முழுமையாக மறுபயன்படுத்தும் பூஜ்ஜிய திரவக் கழிவு வெளியேற்றம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்துதல் மற்றும் பெரிய அளவிலான மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இதையடுத்து, நபார்டு மற்றும் இன்டெல்கேப் நிறுவனங்களின் பிரதிநிதிகள், இந்த முயற்சிகளை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல டிஇஏ முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

மேலும், பொதுவான பசுமை உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டை மேற்கொள்வதில் பல்வேறு தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைத்து, ஒருங்கிணைந்த அணுகுமுறையைப் பின்பற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
திருப்பூரில் செயல்படும் ஜவுளித் தொழில் நிறுவனங்களில் கணிசமானவை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களாக இருப்பதாக டிஇஏ பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். எனவே, பசுமை தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் இதர நிலைத்தன்மை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வதற்கு ஏதுவாக, நிதியுதவித் திட்டங்களை உருவாக்கும்போது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தேவைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

குறிப்பாக, குறைந்த வட்டி விகிதம், நீண்டகால கடன் திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற வகையிலான நிதியுதவி வழிமுறைகள் ஆகியவற்றை ஆராய வேண்டும் என டிஇஏ சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன் மூலம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பசுமை தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட நிலைத்தன்மை சார்ந்த திட்டங்களில் தேவையான முதலீடுகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டது.





முந்தைய செய்தி
காலாண்டில் 1 லட்சத்தைக் கடந்த வீடுகள் விற்பனை
அடுத்த செய்தி
தொடர்ந்து 3வது மாதம்! ஜிஎஸ்டி வசூலை வாரிக்குவிக்கும் இந்தியா!

தொடர்புடைய செய்திகள்